Saturday, 12 November 2011

இயற்கையாகக் கிடைக்கும் இஞ்சியின் மகிமை அளப்பெரியது


உணவுகளிற்கு சிலர் இஞ்சி பாவிப்பதே இல்லை ஏனெனில் அவர்களுக்கு இஞ்சியின் மகிமை பற்றி தெரியாது இருக்கலாம். இஞ்சியின் மகிமை பற்றி எமது பாட்டிமாரை கேட்டாலே போதும் அதன் மகிமைகள் பற்றி கூறுவார்கள்.
பல வருத்தங்களுக்கு நோய் தீர்க்கும் நிவாரணியாக இஞ்சி பயன்படுகின்றது. இஞ்சியில் உள்ள சில மருத்துவத் தன்மைகள் இரத்தக் குழாய்களில் நேரிடும் இரத்த உறைவு காரணமாக வரும் மாரடைப்பைத் தடுப்பதாகக் கண்டு பிடித்துள்ளனர்.
ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி நசுக்கி, ஒரு கோப்பை பாலில் இட்டுக் காய்ச்சி வடிகட்டி, அதனுடன் கற்கண்டு சேர்த்து குடித்துவர, இருமல், சளி தொல்லைகள் நீங்கும்.

இனி இருமல், சளி வந்தால் இந்த முறையை பின்பற்றி பாருங்கள் உடனடி பலன் கிடைக்கும். உடலில் எந்த கோளாறையும், வலிகளையும் போக்கும் வல்லமை படைத்தது இயற்கை மூலிகைகள் தான்.
இயற்கையின் ஓர் கொடை தான் இந்த இஞ்சியும் மூட்டு வலி உட்பட எந்த வலியையும் போக்கும் தன்மை இஞ்சிக்கு உண்டு.
கொதிக்கும் தண்ணீரில் இரண்டு துண்டு இஞ்சியை நறுக்கிப் போட்டு, அந்த தண்ணீரை குடித்து பாருங்கள். சோடா வகைகளில் இஞ்சி சோடாவும் உண்டு. சாப்பாடு சமிபாடு அடையாதவர்கள் இஞ்சி சோடா வாங்கி குடித்தால் உடனே உணவு சமிபாடு அடையும். இஞ்சியின் அருமை பெருமைகளை சொல்லி கொண்டே போகலாம்.

No comments:

Post a Comment