Friday, 9 December 2011

மூட்டு வலிகாரர்களுக்கு முடகத்தான்...


.
*பொதுவாக வயதானவர்களுக்கு வந்துவிடும் வலி மூட்டு வலி.அதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.இதற்குக் காரணம் மூட்டுகளில் தங்கிய யூரிக் அமிலம், புரதம், கொழுப்புத் திரட்சி, சுண்ணாம்பு, பாஸ்பரஸ் படிவங்கள்தான்.
இவைகளை கரைத்து வெளியேற்றும் சக்தி முடக்கத்தான் கீரைக்கு உண்டு.

முடக்கத்தான் சாறு

*இரண்டு கைப்பிடி அளவு சிறுசிறு துண்டுகளாக நறுக்கிய முடக்கத்தான் கீரையை எடுத்துக்கொள்ள வேண்டும். தண்டு, இலை எல்லாவற்றையுமே பயன்படுத்தலாம். பூண்டு நான்கு பல், இஞ்சி சின்னத்துண்டு, சிறிய வெங்காயம் ஒன்று, மிளகு அரைத்தேக்கரண்டி, சீரகம் அரை தேக்கரண்டி.

*இவைகளை ஒரு தேக்கரண்டி சமையல் எண்ணெய் விட்டு வதக்கி எடுக்கவேண்டும்.அதனுடன் இரண்டு குவளை நீர் ஊற்றி வேகவைக்க வேண்டும் கீரை வெந்ததும் இறக்கி அதன் சாற்றை நன்கு வடிகட்டினால் சாறு கிடைக்கும்.இதனை முடித்தால் மூட்டில் தங்கியிருந்த அனைத்து வலிகளும் பறந்தோடும்.

*முதுகு தண்டுவடம் தேய்மானம் இருப்பவர்கள், மாதவிலக்கு நின்ற பிறகு பெண்களுக்கு ஏற்படக் கூடிய எலும்புத் தேய்மானம், எல்லாவிதமான மூட்டுவாதம், மூட்டுவலிகளைக் குணப்படுத்தும். இந்த நோய்கள் வருவதற்கு முன்பே சாப்பிட்டால் வராமல் தடுக்கலாம். 40 வயது தொடங்கியவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வருவது நல்லது.

மலம் பேதி
 
*இதனைச் சாப்பிடத் தொடங்கும்போது முதல் ஒன்று இரண்டு நாட்களுக்கு சிலருக்கு மலம் பேதி போன்று போகும். ஆனால் பயப்படத் தேவையில்லை. தொடர்ந்து சாப்பிடலாம். அப்புறமென்ன ஓடி ஆடலாம். சின்னக் குழந்தை போல துள்ளிக் குதிக்கலாம். உடனே முடக்கத்தான் கீரை வாங்க போங்க மூட்டுவலிக்கு குட் பை சொல்லுங்க !

வயாக்ரா

*வயாக்ரா மட்டுமல்ல அந்த வகையைச் சேர்ந்த சியாலிஸ், லெவித்ரா போன்ற மருந்துகளும் ஆண்களின் காதுகளைப் பாதிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.பெங்களூரிலுள்ள இந்திய விமானப்படை மருத்துவமனைக்கு 44 வயதான நபர் சிகிச்சைக்காக வந்தார். அவருக்குத் திடீரென காது கேட்கவில்லை... என்று உறவினர்கள் கூறினர்.

*அவர் 15 நாட்கள் தொடர்ந்து வயாக்ரா மாத்திரையை சாப்பிட்டுள்ளார். அந்த மாத்திரைதான் காதுகேட்கும் திறன் பாதிக்கப்பட்டதற்குக் காரணம் என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.

No comments:

Post a Comment