Friday, 15 November 2013

சர்க்கரை நோயாளிக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் !

pomegranateஉலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இத்தகைய நீரிழிவு நோய் வருவதற்கு காரணம், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பது தான். இவர்களுக்கு வரப்பிரசாதமாக கிடைத்துள்ளது மிக எளிதில் கிடைக்க கூடிய பழங்கள்.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒருசில பழங்களை சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.

நீங்காத படையை நீக்கும் நெட்டிலிங்கம்!

nettilingam
வெயில் காலத்தில் உடலில் அங்கங்கு அரிக்க ஆரம்பிக்கும். சிலர் பேசிக்கொண்டே அக்குள், தொடை, கழுத்து, முழங்கால் மடிப்பு, கணுக்கால் என பல இடங்களை மாற்றி, மாற்றி சொறிந்துக் கொண்டே இருப்பார்கள். பொதுவிடங்களில் இது போல் சொறிவதால் பிறரின் கேலிக்கும், ஏளனத்துக்கும் ஆளாக வேண்டிவரும். சிலர் வெளியிடங்களில் அரிப்பு ஏற்பட்டால் சொறியாமல், கஷ்டப்பட்டு அரிப்பை அடக்கிக்கொண்டு, வீட்டிற்கு வந்தவுடன் நன்கு சொறிந்து தள்ளிவிடுவார்கள். இதனால் அரிப்புள்ள இடங்களெல்லாம் இரத்தக் களறியாக மாறிவிடும். பின் எரிச்சல் அதிகரித்து, வலி தாங்காமல் ஏதாவது எண்ணெயை தடவி அரிப்பை தணித்துக்கொள்வார்கள். வெயில்காலத்தில் மட்டும் இந்த அரிப்பு அதிகமாவது ஏன் தெரியுமா? நமது தோலில் தோன்றும் வியர்வையின் ஈரப்பதத்தில் ஏராளமான பூஞ்சைக் கிருமிகள் வளர ஆரம்பிப்பதே அரிப்புக்கு காரணமாகும்.

இளமையா இருக்க ஆசையா ? சோற்றுக்கற்றாழை (Aloe vera) தான் பெஸ்ட்

aloe
நீங்கள் இளமையாக இருக்க வேண்டும் என்றால், மரழாமல் சோற்றுக் கற்றாலையை பயன்படுத்துங்கள்.
கற்றாழை ஜெல்லை (சோறு) சுத்தமான நீரில் 7 முறை கழுவி சுத்தம் செய்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில்சாப்பிட்டுவர உங்கள் இளமை என்றும் ஊஞ்சலாடிக் கொண்டே இருக்கும். உடலில் கஸ்தூரி மணம் வீசும். சருமம் வறண்டுபோகாமல் ஈரப்பதத்துடன் ஜொலிக்கும்.

பாட்டி வைத்தியங்கள் பல, அதில் சில இதோ !

Papayas
பப்பாளி பழத்தை மசித்து முகம், கழுத்து, கைகளில் பூசி 1\2 மணி நேரம் ஊறவைத்து பின்முகம் கழுவ முக அழகு கூடும்.
கண்ணாடி துண்டால் காயம் ஏற்பட்டால் வாழைபழத்தோலை அந்த காயத்தின் மீது வைத்து கட்டுங்கள், ரத்த போக்கு நின்று காயம் விரைவில் ஆறும்.
கைகால்களில் வெடிப்பு குணமாக மாசிக்காய், கடுக்காய், விளக்கெண்ணை, வேப்ப எண்ணை, தேங்காய் எண்ணை சரிசமமாக கலந்த தடவ குணமாகும்.

Wednesday, 26 December 2012

புதினாக்கீ​ரையின் ம‌க‌(ரு)த்து​வ‌ம்

mintஅடிக்கடி புதினாக்கீரையைச் சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள இரத்தம் சுத்தமாகும். புதிய இரத்தம் உற்பத்தியாகும். எக்காரணத்தினாலாவது வயிற்றுப் போக்கு ஏற்பட்டிருந்தால், அந்தச் சமயம் புதினாக்கீரைத் துகையலைச் சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு நின்றுவிடும்.
சிறு குழந்தைகளின் வயிற்றுப் போக்கு, வாந்தி குணமாக . . .
சிறு குழந்தைகளுக்கு ஆகார விகற்பத்தின் காரணமாக வயிற்றுப் போக்கு வாந்தி ஏற்படுவதுண்டு. இதற்குப் பல வகையான மருந்துகள் உண்டு என்றாலும் புதினாக்கீரைக் கஷாயம் கைகண்ட மருந்தாக இருக்கிறது. புதினாக்கீரை இலைகளை மட்டும் ஆய்ந்து எடுத்து ஒரு கைப்பிடியளவு அம்மியில் வைத்து லேசாக நைத்து, அதை ஒரு சட்டியில் போட்டு அடுப்பில் வைத்து, நன்றாக வதக்கி அதில் ஆழாக்களவு தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். அரை ஆழாக்களவாகச் சுண்டியபின் சட்டியை இறக்கி வடிகட்டி, அதில் வேளைக்குச் சங்களவு வீதம் காலை மாலையாக மூன்று வேளை கொடுத்தால் போதும், வயிற்றுப் போக்கு, வாந்தி நின்று விடும்.

Wednesday, 20 June 2012

பாதம்பருப்பு சாப்பிடுங்க!-நீரிழிவு ஓடிப்போயிடும்!!

patham11நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் பதாம் பருப்புக்கு உண்டு என்று புதிய ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது. எனவே நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினசரி பாதம் பருப்பு உட்கொள்வதன் மூலம் டைப் 2 நீரிழிவு குணமாகும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மருத்துவ பல்கலைக்கழக  மருத்துவ விஞ்ஞானிகள் சர்க்கரை நோயை குணப்படுத்தும் உணவுப் பொருட்கள் பற்றிய ஆய்வு மேற்கொண்டனர். அதில் பாதம் பருப்பானது நீரிழிவினை ஏற்படுத்தும் காரணிகளை கட்டுப்படுத்துவதாக கண்டறிந்துள்ளனர்.

Postஎல்லா வயதினருக்கும் உடலுக்கு நன்மை செய்யும் கருணைக் கிழங்கு title


  கிழங்கு வகைகளுள் மிக முக்கியமானது, கருணைக் கிழங்கு. உருளைக் கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஆகியன போல் உடலுக்கு நன்மை செய்யும் கிழங்கு இது. எல்லா வயதுக்காரர்களும் குறிப்பாக வாத நோயாளிகள், சிறுவர்கள், வயதானவர்கள் என அனைவரும் பயமில்லாமல் சமைத்துச் சாப்பிடலாம். எந்தத் தீங்கும் செய்யாத கிழங்கு என்பதால்தான் இதைக் கருணைக் கிழங்கு என்கிறார்கள்.
100 கிராம் கிழங்கில் கிடைக்கும் கலோரி 111 ஆகும். கால்சியம் 35 மில்லி கிராம், பாஸ்பரஸ் 20 மில்லி கிராம், வைட்டமின் 'ஏ' வைட்டமின் 'பி' ஆகியவையும் இக்கிழங்கில் உள்ளன. எனவே